கரூர், நவ. 13: அரவக்குறிச்சி ஊராட்சியில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெறுவதாகஆர்டிஓ தகவல். கரூர் மாவட்ட அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பில் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடத்துதல் அறிவிப்பு எண். அ1/3516/2023 நாள்.11.11. 2025 கரூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தலைப்பில் கீழ் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கு www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் மூலம் நேர்காணல் அழைப்பாணை வரப்பெற்றவர்கள் மட்டும் இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு ஊராட்சி ஒன்றியம் அரவக்குறிச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராக தெரிவிக்கப்படுகிறது.
+
Advertisement
