கரூர் லைட்ஹவுஸ் கார்னர் காந்தி சிலையை சுற்றிலும் தடுப்புவேலி அமைக்க வேண்டும்
கரூர், நவ. 12: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள காந்தி சிலையை சுற்றிலும் தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் காந்தி சிலை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பகுதியில் காந்தி சிலை உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலையை மையப்படுத்தி மினி ரவுண்டானா அமைக்கப்பட்டது.
இந்த ரவுண்டானா வழியாக கரூர் திருச்சி உட்பட பல்வேறு மாவட்ட பகுதிகளுககு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில், எளிதில் செல்லும் வகையில் காந்திசிலை திறந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த சிலையை சுற்றிலும் தடுப்பு அமைக்க வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள காந்தி சிலையை சுற்றிலும் தடுப்பு அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.