டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: ரயில் ,பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை
கரூர், நவ. 12: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனைகளை மேற்கொண்டனர். டெல்லியில் நேற்று முன்தினம் மாலை கார்வெடித்தது. அதில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Advertisement
இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா தலைமையில் டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உட்பட போலீசார், கரூர் ரயில்வே நிலையம், புதிய மற்றும் பழைய பேரூந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
Advertisement