வேலாயுதம்பாளையம், செப்.11: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட மையத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கரூர் வருகை தந்த கரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பால்வளத்துறை அமைச்சருமான விஜயலட்சுமியை சந்தித்து கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க பரிந்துரை கடிதம் 25-12-2025 அன்று வருவாய் நிர்வாக ஆணையர் முன்மொழி கடிதம் அனுப்பப்பட்டு இதுநாள் வரை அரசாணை வெளியிடாமல் இருந்து வருகிறார்கள்.
மேற்கண்ட அரசாணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி வழங்குவதற்கு தமிழக முதல்வர், வருவாய்த்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை மனுவை வழங்கினார்கள். இந்த சந்திப்பில் மாநிலத் துணைத் தலைவர் தனலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவிகா, மாவட்ட இணைச் செயலாளர்கள் அருண்குமார், வெண்ணிலா, நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


