கரூர், செப். 11: அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும்,எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்த மாதத்தில் கடந்த ஐந்து நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது, இதன் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களை மேலும் கோப்படுத்தும் வகையில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு ஐந்துக்கும் மேற்பட்ட முறை மின்தடை செய்யப்பட்டது.
இந்த அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டதோடு, வெயிலை சமாளிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.விரைவில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கவுள்ள நிலையில், மேலும் மின் வெட்டு அதிகமாக இருக்குமோ என்ற பீதியில் பொதுமக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


