Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லாலாப்பேட்டை அருகே விபத்தை தவிர்க்க வர்ணம் பூசும் பணி தீவிரம்

லாலாப்பேட்டை, ஜூன். 11: விபத்தை தவிர்க்க வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. கரூர் லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் அதிவேகமாக கடந்து செல்வதை தடுக்கும் பொருட்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசாததால் வேகமான வரும் இரு சக்கர வாகனங்களால் பள்ளி மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

வாகனங்களில் வருபவர்களும் வேகத்தடை இருப்பது எதுவும் தெரியாமல் பல நேரங்களில் கீழே விழுந்தும் காயமுற்று வந்துள்ளனர். எனவே வேகத்தடைகள் இருப்பதை அறியும் பொருட்டு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் லாலாபேட்டை கொடிக்கால் தெரு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.