தோகைமலை, அக். 10: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கரூர் மாவட்டம் தோகைமலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதையடுத்து தவெகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தோகைமலை மேற்கு ஒன்றிய தவெக சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக்கழக கரூர் கிழக்கு மாவட்;ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தோகைமலை மேற்கு ஒன்றிய தவெக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


