கிருஷ்ணராயபுரம், செப். 10: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சிந்தலவாடி ஊராட்சிக்குட்பட்ட உடையான்தோட்டம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடாசலம்(60). இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணராயபுரம் அருகே சிக்கணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு காட்டில் கூலி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக கோவக்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து வெங்கடாசலம் மகன் பரணிதரன் கொடுத்த புகாரில் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


