கரூர், செப். 10: நெல்லுக்கு மேலுரம் இடுவது குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு, முதல் மேலுரம் 25 லிருந்து 35வது நாட்களுக்குள் யூரியா 20 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ இட வேண்டும். இரண்டாவது மேலுரம், 55 லிருந்து 65வது நாட்களுக்குள் யூரியா 20 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ இட வேண்டும்.
மூன்றாவது மேலுரம் 85 லிருந்து 100 நாட்களுக்குள் அம்மோனியம் சல்பேட் 20 கிலோ மற்றும் பொட்டாஷ் 15 கிலோ என்ற அளவில் இட வேண்டும். இந்த அளவிற்கு மேல், உரம் இட்டால், பயிர் எடுத்துக் கொள்ளாது. பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்புகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


