Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மின்சாரம் தாக்கி மளிகைகடைக்காரர் பலி

தோகைமலை, அக். 9: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி கொசூர் கஸ்பா தங்கராசு மகன் பாலசுப்பரமணியன் (25). இவர் மளிகை கடையில் வேலை செய்து வந்து உள்ளார். இந்நிலையில் கொசூர் கடைவீதி பகுதியில் தொண்டமாங்கிணம் ஊராட்சி சந்தையூர் பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகின்றனர். அப்போது மின் மோட்டாரை நிறுத்துவதற்க்கா சுச்சை பாலசுப்பிரமணியன் முயன்றுள்ளார். அப்ப்போது மின்சாரம் தாக்கி துக்கிவீசப்படார்.

அக்கம் பக்கத்தினர் பாலசுப்பிரமணியனை மீட்டு தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை, திருச்சி ஆகிய பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தந்தை தங்கராசு தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.