Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கிருஷ்ணராயபுரம் அருகே டீக்கடையில் 5 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்

கிருஷ்ணராயபுரம், அக். 9: கிருஷ்ணராயபுரம் அருகே டீக்கடையில் பயன்படுத்திய 5 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் இயங்கி வரும் டீக்கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று காலை கிருஷ்ணராயபுரம் வட்ட வழங்கல் அலுவலர் தீபத்திலகை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேங்கல் வாரச்சந்தை சாலையில் உள்ள ரவிச்சந்திரன் டீக்கடையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த 5 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வட்ட வழங்கல் அலுவலர் தீபத்திலகை பறிமுதல் செய்தார்.