கரூர், அக். 9: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வருமான வரித்துறை அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிங்கராயர் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பில் குளித்தலை மற்றும் சிந்தாமணிப்பட்டி பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தவெகவின் தேர்தல் வாக்குறுதியின்படி டாப்ஸ் ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை வழங்க வலியுறுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


