கரூர், செப். 9: தாந்தோணி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் தேவேந்திர குல சமுதாயத்தை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திர சேனா சோசியல் கல்ச்சர் பவுண்டேசன் அமைப்பின் சார்பில் தேவேந்திர குல சமூதாயத்தை ஒபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கரூர் தாந்தோணிமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாக உறுப்பினர் சசிக்குமார் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
+
Advertisement


