கரூர், செப். 9: கரூர் மாவட்டம் பள்ளப்பாளையம் பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வசதி கேட்டு மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் காத்திருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கரூர் மாவட்ட இணைச் செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார்.
அனைத்து நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி காலிகுடங்களுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


