Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மணவாடி அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா

கரூர், செப்.9: மணகரூர் தாந்தோணி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைபள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடபட்டது. விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான கந்தசாமி, தாந்தோணி யூனியன் முன்னாள் துணை தலைவர் வசந்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பிடிஏ துணை தலைவர் பிரின்ஸ் சரவணன் கலந்துகொண்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

மாணவர்கள் கல்வி கற்க்கும் வயதில் ஆசிரியர்கள் வழிகாட்டுதலோடு பயணித்தால் மட்டுமே சிறந்து விளங்க முடியும் என்றும், மாணவர்கள் இங்கு படித்து நாளை இதே பள்ளிக்கு ஆசிரியராக வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என பேசினார்.அதனைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு மாணவர்கள் இனிப்பு மற்றும் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி, துணை தலைவர் தீபா ஆகியோர் செய்திருந்தனர். உதவி தலைமை ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.