கடவூர், அக்,8: கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் சரகம் கடவூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பழனிச்சாமி (42). இவர் கடவூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள நாடகமேடை அருகே மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இது குறித்து பாலவிடுதி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பழனிச்சாமி மதுபானங்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதனை அறிந்த போலீசார் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்ற பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


