கரூர், அக். 8: அளவுக்கு அதிகமாக வயலில் நெல்லுக்கு மேலுரம் கூடாது என்று வேளாண்மைத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, ஒரு ஏக்கர் நெற் பயிருக்கு, முதல் மேலுரம் 25,35 வது நாட்களுக்குள் யூரியா 20 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ இட வேண்டும். இரண்டாவது மேலுரம், 55,65வது நாட்களுக்குள் யூரியா 20 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ இட வேண்டும்.
மூன்றாவது மேலுரம் 85,100 நாட்களுக்குள் அம்மோனியம் சல்பேட் 20 கிலோ மற்றும் பொட்டாஷ் 15 கிலோ என்ற அளவில் இட வேண்டும். இந்த அளவிற்கு மேல், உரம் இட்டால், பயிர் எடுத்துக் கொள்ளாது. பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்புகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


