Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரவக்குறிச்சி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பலி

அரவக்குறிச்சி, செப். 5: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, தாளி ரோடு, கணபதி நகரைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (45). இவர் தனது மனைவி மம்தா (41) மற்றும் உறவினர் ரதீஷ் (32) ஆகியோருடன் காரில் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். பள்ளப்பட்டி பிரிவு, இந்திரா நகர் அருகே கார் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி சென்றபோது, ஓட்டுநர் ரதீஷ் காரை அதிவேகமாகவும், ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மம்தாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.