கரூர், செப். 5: கோகுலாஷ்டமியை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. கரூர் பசுபதீ்ஸ்வரா கோயில் அருகே துவங்கிய இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஏராளமான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு கிருஷ்ணர் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். கருர் பசுபதீஸ்வரா கோயில் அருகே துவங்கிய இந்த பேரணி ஜவஹர் பஜார் வழியாக சென்று தனியார் மண்டபத்தை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.
+
Advertisement


