வேலாயுதம்பாளையம், ஆக. 5: கர்நாடகா மாநிலம் மைசூரில் 29வது தேசிய அளவிலான ஷிட்டோ-ரியூ கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த யுகி ஷிட்டோ-ரியு கராத்தே அகாடமி மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட கராத்தே சங்கம் மாஸ்டர் செந்தில்குமார் தலைமையில் பங்கேற்ற மாணவர்கள் வியாஷ், கட்டா பிரிவில் தங்கப்பதக்கம், கிஷோர் சண்டை பிரிவில் தங்கப்பதக்கம், சஸ்வின் கட்டா பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.


