கரூர், ஆக. 5: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதி வழியாக செல்லும் பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலயுறுத்தி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் வழியாக பாசன வாய்க்கால் செல்கிறது. செட்டிப்பாளையம் தடுப்பணையில் இருந்து பல்வேறு வாய்க்கால்கள் கரூர் நகரைத்தை ஒட்டி செல்வதை போல இந்த வாய்க்காலும் செல்கிறது.
ஆனால், வாய்க்கால் நீண்ட காலம் பராமரிக்காத காரணத்தினால் பிளாஸ்டிக் உட்பட பல்வேறு கழிவுகள் படர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை வரும் காலங்களில் பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. எனவே, இந்த கழிவுகளை அகற்றி பாசன வாய்க்காலை துாய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு பிளாஸ்டிக் கழிவுகள் சேராத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.


