குளித்தலை, ஆக. 5: கரூர் மாவட்டம் தென்கரை மற்றும் கட்டளை மேட்டு பாசன வாய்க்கால் விவசாயிகள் ஒன்றிணைந்து ஆற்று பாதுகாப்பு பொதுப்பணி நீர்வழித்துறை உட்கோட்ட உதவி செயற்பொறியார் வெங்கடேசனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் மாயனூரில் இருந்து தென்கரை கட்டளை வாய்க்காலில் பொது பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாயனூரில் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு உதவி செயற்பொறியாளர் மேல் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு அலுவலகம் முன்பு கூடி இருந்த விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


