Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குடும்ப தகராறால் விரக்தி கூலிதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கரூர், பிப். 5: கரூர் அருகே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரைண நடத்தி வருகின்றனர். கரூர் கோட்டையண்ணன் தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(37). கூலித்தொழிலாளி. இவருக்கும் இவரின் மனைவிக்கும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், விரக்தியடைந்த மனநிலையில் இருந்து வந்த இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கினார். ஆபத்தான நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.