கிருஷ்ணராயபுரம், நவ. 4: கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் ஊராட்சி பகுதியில் சாலை ஓரத்தில் மின் கம்பங்கள் தாழ்வாக சென்றது தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் ஊராட்சி மேலடை முதல் சேங்கல் செல்லும் பாதையின் ஓரத்தில் உள்ள மின் கம்பிகள் சாலையின் விளிம்பில் தாழ்வாக தொங்குவதால் அந்த வழியாக செல்லக்கூடிய பள்ளி, கல்லூரி வாகனங்கள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர்.
இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து தாழ்வாக சென்ற மின் கம்பிகளை மின்சார வாரியத்துறையினர் சரி செய்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரிய பணியாளர்களுக்கும் மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.


