Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

லாரிகளில் மணல் ஏற்றி செல்லும் போது கண்களில் தூசிபடுவதால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், நவ. 4: கரூர் மாநகர பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் வீடு, அலுவலகங்கள் போன்ற கட்டுமான பணிகள் தற்போது அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக மணல், செங்கல், இரும்பு, ஜல்லிக்கற்களை வேன் மற்றும் லாரிகளில் ஏற்றப்பட்டு மாநகர பகுதிகளின் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் தார்ப்பாய் மூடிச் செல்லாமல் திறந்த நிலையில் சென்று வருகிறது.

இதனால் திறந்த நிலையில் செல்லும் போது வாகனங்களில் உள்ள மணல் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் கண்களில் பட்டு விபத்துகள் ஏற்படுகிறது. பின்னர் கரூர் மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து இதேபோல் நடைபெற்று வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.