குளித்தலை, நவ. 4: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே போதை பொருள் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் குளித்தலை காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்ஸ்பெக்டர் குணவதி முன்னிலை வகித்தார்.
இந்த விழிப்புணர்வு போட்டி குளித்தலை சுங்க கேட்டில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்கி மாவட்ட மருத்துவமனை, கடம்பர் கோவில், நீதிமன்றம், காவல் நிலையம், தலைமை தபால் நிலையம், தாசில்தார் அலுவலகம், பயணியர் விடுதி வழியாக சென்று குளித்தலை காந்தி சிலை வரை நிறைவடைந்தது.
இப்போட்டியில் சிறுவர், சிறுமிகள், காந்தி சிலை வரையிலும் பெரியவர்கள் மற்றும் காவல் துறையினர் ராஜேந்திரம் வரையிலும் மாரத்தான் போட்டி நடைபெற்றதது. இதில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள், இளைஞர்கள், கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


