Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்ணராயபுரத்தில் கனமழையால் சாய்ந்த மரம் அகற்றம்

கிருஷ்ணராயபுரம், ஜுன் 4: கிருஷ்ணராயபுரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் சாய்ந்த மரத்தினை நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சீரமைத்தனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மாயனூர், வீரராக்கியம், கிருஷ்ணராயபுரம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள் அடியோடு சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டது.

மின்சார வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள் மீது விழுந்த மரங்களை இரவோடு இரவாக அகற்றி மின் வினியோகம் வழங்கினர். இதில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணராயபுரம் கடைவீதி பகுதியில் மரம் ஒன்று அடியோடு சாய்ந்தது. அப்போது அவ்வழியாக வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை தேசிய நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.