Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தாந்தோணிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த பூங்காவை சீரமைக்கவேண்டும்

கரூர், மே. 4: கரூர் தாந்தோணிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிதிலடைந்த பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் நலன் கருதி சிறுவர்களுக்கான பூங்கா அமைத்து தரப்பட்டது.

சில மாதங்கள் மட்டுமே இவை பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் யாரும் இதனை பயன்படுத்திட முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியினர் நலன் கருதி பூங்கா வளாகத்தை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.