Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கிருஷ்ணராயபுரத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கல்

கிருஷ்ணராயபுரம், பிப்.4: கிருஷ்ணராயபுரத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் பயனாளர்களுக்கு வீடு தேடி கொடுக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் ரேஷன் பொருள்கள் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதால் அவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

இதில் கிருஷ்ணராயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மஞ்சமேடு பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொடுக்கும் பணியை நியாய விலைக்கடை பணியாளர்கள் வழங்கினர்.