Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

கருர், பிப். 4: பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார்களால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2 கார்கள நேற்று கரூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.

மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா, ஆயுதப்படை டிஎஸ்பி வெங்கடாச்சலம், தனிப்பி ரிவு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கரூர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைத்து வாகனங்களும் அதன் தன்மைக்கு ஏற்ப ஏலம் விடப்பட்டன .