Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வெள்ளியணை பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது

கரூர், மே. 1: கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படடு வருகிறது. இந்நிலையில், வெள்ளியணை பேரூந்து நிறுத்தம் அருகே சாலையோரம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் கலந்து செல்கிறது.தற்போதைய நிலையில், கரூர் மாவட்டம் முழுதும் சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது.

சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இந்நிலையில், வெள்ளியணை பகுதியில் தண்ணீர் வீணாகி செல்வதை அனைத்து தரப்பு மக்களும் பார்த்துச் செல்கின்றனர். இந்த பகுதியில தண்ணீர் உடைப்பு ஏற்பட்டது இது 6வது முறை என இந்த பகுதியினர் கூறுகின்றனர். எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.