Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

குளித்தலை டாக்டர் அரசு கலைஞர் கலைக்கல்லூரியில் தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி கருத்தரங்கம்

குளித்தலை, ஜூலை 31: கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டமும் இணைந்து கல்லூரியில் பயிலக்கூடிய முதுகலை மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வுக்கான பயிற்சி கருத்தரங்கை நடத்தியது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி வரவேற்றார். கல்லூரி பொறுப்பு முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். இதில் திருச்சி, தஞ்சை பெரியார் அரசு கலைக் கல்லூரி ஆங்கில உதவி பேராசிரியர் நீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். என்இடி தகுதி அடைவதற்கு எளிய வழி முறைகளை எடுத்துரைத்தார்.

விழாவில் தாவரவியல் துறைத்தலைவர் கோ. வேணுகோபால், ஆங்கில துறைத்தலைவர் ஹில்டா தேன்மொழி, வாழ்த்துரை வழங்கினர். ஆங்கில உதவி பேராசிரியர் விஜய் நன்றி கூறினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் தாமஸ் பெலிக்ஸ் மற்றும் ஆங்கில உதவி பேராசிரியர்கள் டாக்டர் விஜய், டாக்டர் சரவணன், டாக்டர் சுபத்ரா டாக்டர் ராமலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.