Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வெள்ளியணை அரசு பள்ளியில் படர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?

கரூர், அக். 28: வெள்ளியணை அரசு பள்ளியில் படர்ந்துள்ள செடிககள் அகற்றப்படுமா? என பொதுமக்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேதனையுடன் தெரிவித்தனர். கரூர் மாவட்டம் வெள்ளியணையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்காண மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சாலையோரம் உள்ளது. இதன் காரணமாக அதிகளவு முட்செடிகள் வளர்ந்து மோசமான நிலையில் பள்ளி வளாகம் உள்ளது.இதனால், விஷ பூச்சிகளின் நடமாட்டம் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

எனவே, இந்த பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவரை ஒட்டி படர்ந்துள்ள செடி கொடிகளை பள்ளி மாணவிகள் நலன் கருதி அகற்றிட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான ஏற்பாடுகளை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தெரிவித்தனர்.