Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

லாலாப்பேட்டை அருகே சட்டவிரோதமாக மதுவிற்ற 2 பேர் கைது

லாலாப்பேட்டை, ஜூலை. 23: லாலாபேட்டை அருகே வயலூரில் மதுவிற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக லாலாபேட்டை அருகே வயலூரில் தனம் (60). பிரகாஷ் (27). ஆகிய இருவரும் வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 48 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.