Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நோட்டீஸ் அனுப்பிய கோயில் நிர்வாகத்தை கண்டித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 16: கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி நுாற்றுக்கணக்கான ஜெ ஜெ நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரு்ர் தாந்தோணிமலை ஜெ ஜெ நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நுாற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து ஒன்று கூடினர்.கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு பேராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், குடியிருப்போர் நலச்சங்க தலைவர் தண்டபாணி தலைமையில் நுாற்றுக்கணக்கானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தாந்தோணிமலை ஜெ ஜெ நகரில் முறையாக பத்திரப் பதிவு செய்து மாநகராட்சிக்கு வரி கட்டி குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு பெற்று வாழ்ந்து வரும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பகளை ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் அனுப்பி உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் நிர்வாகத்தையும், இந்த செயலை வேடிக்கை பார்க்கும் நிர்வாகத்தையும், இதனை சட்ட ரீதியாக நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.