நுண்கலைத்திறன் போட்டியில் அரசுப்பள்ளி மாணவர் குரலிசையில் முதலிடம்
Advertisement
அரவக்குறிச்சி, டிச.10: நுண்கலைத்திறன் போட்டியில் அரவக்குறிச்சி மாணவர் குரலிசைப்போட்டியில் முதலிடம் பெற்றதையடுத்து வட்டாரக்கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கான நுண்கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது. கரூரில் நடைபெற்ற போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவர் முகமது ஷாகிர் குரலிசைப் போட்டியில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
Advertisement