Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கரூர் மாநகராட்சி நீச்சல் குளத்தில் பயிற்சி பெறலாம்

வேலாயுதம்பாளையம், செப். 8: கரூர் மாநகராட்சி ஆணையர் பிரித்விராஜ் மாநகராட்சி நீச்சல் குளத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் கார்ப்பரேஷன் நீச்சல் குளம் சுமார் ரூ.2.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டு மிகவும் அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கரூர் மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அழகான ஒரு நீச்சல் குளத்தை வழங்கி உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, 6 வயது முதல் 70 வயது வரை அனைத்து பொதுமக்களும், குழந்தைகளும் இந்த நீச்சல் குளத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று நலமுடன் வாழ நீச்சல் ஒரு முழுமையான உடற்பயிற்சி ஆகும். எனவே, இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம். கரூர் பொதுமக்கள் ஒரு முறை நீச்சல் குளத்தை பார்வையிட்டால் அதன் சிறப்பு பற்றி நேரில் தெரிந்து கொள்ள முடியும். நீச்சல் குளத்தில் பயன்படுத்துவதற்கு உங்களுடைய ஆதார் கார்டு மட்டும் போதுமானது மற்றும் நீச்சல் உடையில் வரவும். இதற்குண்டான வழிமுறைகள் நீச்சல் குளத்தில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.