லாலாப்பேட்டை, நவ. 2: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பஞ்சப்பட்டி பகுதியில் லாலாப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மனைவி மலர்(47) தனது பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றது தெரியவந்தது.
அதன்பேரில் மலரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் கீழ பஞ்சப்பட்டியில் மதுபாட்டில் விற்ற ராஜலிங்கம் மகன் பூபதி(37) என்பவரை கைது செய்ததுடன் 26 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


