குளித்தலை, நவ. 2: உள்ளாட்சி தினத்தையொட்டி 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.பேட்டை, வதியம் வைகைநல்லூர், சத்தியமங்கலம், திம்மம்பட்டி, இரணியமங்கலம், நல்லூர், சூரியனூர், இனுங்கூர், பொய்யாமணி, குமாரமங்கலம், ராஜேந்திரம், உள்பட 13 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாவது: அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தின விழா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மாவட்ட நிர்வாகம் தகவல் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
தமிழ்நாடு கிராம மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையைத் தடுத்தல், தமிழ்நாடு பல்லுயிர் வாரியம்-பல்லுயிர் மேலாண்மைக்குழு குறித்து விவாதித்தல், இழிவு தரும் சாதி பெயர்களை மாற்றம் செய்தல், வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், சபாசார் வலைத்தளம்-உள்ளாட்சிகள் தின கிராம சபைக் கூட்டம் குறிப்பு (2026), தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள், வேளாண்மை துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, கால்நடை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


