கரூர், மார்ச் 24: கரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.கருர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரியசாமி, தமிழ்மணியன், அன்பழகன், வேலுமணி, ஆரோக்கிய பிரேம்குமார், பொன் ஜெயராம் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க நிர்வாகி அழகிரிசாமி வரவேற்றார். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில நிர்வாகி அன்பரசன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க நிர்வாகி சதீஸ் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். இதில், பல்வேறு சங்க நிர்வாகிகள் பார்த்தீபன், மலைக்கொளுந்தன், அமுதன், மகாமுனி உட்பட அனைவரும் கலந்து கொண்டு பேசினர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் எனபன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற் றது.
+
Advertisement


