Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கிருஷ்ணராயபுரம் அருகே கிடப்பில் போடப்பட்ட பால பணி

கிருஷ்ணராயபுரம், ஜூலை 31: கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலைப்பட்டி பகுதியில் புதிதாக பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் இருந்து முனையனூர் வழியாக தரகம்பட்டி செல்லும் சாலையில் சின்னமலைப்பட்டியில் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் திமுக ஆட்சியில் புதிதாக பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.இந்நிலையில் கடந்த மாதம் புதிதாக பாலம் கட்டப்பட்ட வந்த பணி கிடப்பில் போடப்பட்டது.

அவ்வழியாக செல்லக்கூடிய பேருந்துகள், பள்ளி கல்லூரி வாகனங்கள், தற்காலிக சாலை வழியாக செல்வதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாலம் கட்டும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த குடிநீர் திட்டம் கடந்த மார்ச் 4, 2026 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.