Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூரில் என்எஸ்எஸ் முகாம்; தூய்மை பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள்

கரூர், செப். 30: கரூர் புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த என்எஸ்எஸ் திட்ட முகாம் 26.09.2026 சனிக்கிழமை சகாயராணி தலைமையில் தொடங்கியது. சிறப்பு விருந்தினராக பசுபதி பாளையம் 12வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா பெரியசாமி, தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கருத்தாளராக கணினி அறிவியல் உதவி பேராசிரியர் சத்யா கலந்துகொண்டனர்.

ஆலய உழவாரப்பணி, போதை ஒழிப்பு பேரணி, காசநோய் ஒழிப்பு பேரணி, ஆரம்ப சுகாதார நிலையம் பார்வை, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பல பணிகளை இலக்காகக் கொண்டு முகாம் தொடங்கப்பட்டது. முகாமினை கரோலின் (திட்ட அலுவலர்) மற்றும் ஜான்சி ராணி (உதவி உதவி திட்ட அலுவலர்) ஆகியோர் வழிநடத்தினர்.