Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும் எலிகள்: கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம்

கரூர், செப். 30: நெல் வயல்களில் மகசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் வல்லுனர்கள் விளக்கமளித்துள்ளனர். நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம் பாதிப்பை எலிகள் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எலிகளின் சிறுநீர், அதன் எச்சம் ரோமங்கள் மற்றும் துர்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தம் ஏற்பட்டு அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

ஒரு நாளைக்கு 30 லிருந்து 50 கிராம் உணவு மற்றும் 40 மில்லி தண்ணீரை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது. எலிகளின் பற்கள் ஒரு நாளைக்கு 0.40 மில்லி மீட்டர் தோராயமாக ஒரு மாதத்திற்கு 1.2 சென்டி மீட்டர் வரை வளரும். அந்த வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் பற்கள் தாடையை கிழித்து அதன் மூலம் ரத்தம் வெளியேறி எலிகள் இறந்துவிடும். அதனால்தான் எலிகள் தன்னுடைய பற்களை ஏதாவது ஒரு பொருளை கடித்துக் கொண்டே இருக்கும். அதன் மூலம் பற்களின் வளர்ச்சி தடைப்படும்.