Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தண்ணீர் ஓடினாலே அழகு தான் போங்க... லாலாபேட்டை அருகே சாலையோர முட்செடிகள் அகற்ற நடவடிக்கை தேவை

லாலாப்பேட்டை, செப். 28: லாலாபேட்டை அருகே பில்லா பாளையம் புனவாசிப்பட்டி சாலையோரம் முளைத்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே பில்லா பாளையம் புது கட்டளை மேட்டு வாய்க்கால் வழியாக புனவாசிப்பட்டி நான்கு ரோடு வரை மற்றும் பஞ்ச பட்டியை இணைக்கும் இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலையில் இருபுறமும் விவசாய நிலங்களும், பொதுமக்கள் பலரும் வசித்து வருகின்றனர். இந்த குறுகலான சாலை வழியாக விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு இடுபொருட்களையும் பொதுமக்கள் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சாலையின் இரு உரங்களிலும் முட்செடிகள் மற்றும் தேவையற்ற செடிகள் பலவும் வளர்ந்துள்ளன. இதனால் சாலை வளைவுகளில் எதிரே இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் கூட தெரியாத அளவிற்கு முட்செடிகள் முளைத்துள்ளன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலரும் காயம் அடைந்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தனர். எனவே பிள்ளபாளையம் புனவாசிப்பட்டி சாலையோரம் முளைத்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.