Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூரிலிருந்து ஈரோடு வரை செயல்படுத்தப்பட உள்ள ரயில்வே விரிவாக்க திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்

வேலாயுதம்பாளையம், ஜூலை 28: தென்னக ரயில்வே நிர்வாகம் கரூரிலிருந்து ஈரோடு வரை ரயில்வே லைன் விஸ்தாரிப்பு பணி மேற்கொள்ள திட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று வேட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று கூடி கலெக்டருக்கு ஒரு மனு வழங்கியுள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, வேட்டமங்கலம் கீழ் பாக கிராமத்தில் விஏஓ, நில அளவர் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்திலிருந்து அலுவலர் என 3 பேரும், விவசாய நிலங்களுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி சர்வேவும், ஆய்வும் செய்ய உள்ளே வந்தார்கள். சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இருந்து வந்த அலுவலர் புதிதாக ரயில்வே பாதை அமைப்பதற்க்கு நிலம் கையகப்படுத்த சர்வேவும், ஆய்வும் செய்ய வந்து உள்ளோம் என்று கூறினார். இதனால் எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம்.

ஏற்கனவே திருச்சி முதல் ஈரோடு வரை ரயில்வே பாதை உள்ளது. அதற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே தேவையான நிலமும் அதற்கு மேலும் தேவைக்கு மீறி நிலம் ஆர்ஜிதம் செய்துவிட்டார்கள். அப்படி எடுத்த நிலத்தை A Class மற்றும் B Class என்று பிரித்து A Class நிலத்தில் தற்போது உள்ள ரயில்வே பாதை உள்ளது. தற்போது உள்ள A Class நிலத்திற்கு தேவைக்கு அதிகமாக இருபுறமும் B Class நிலம் உள்ளது. புதிய ரயில்வே பாதைகளை B Class நிலத்தில் அமைத்து. விவசாயிகளாகிய எங்களுக்கு எவ்வித பாதிப்பும் எற்படாமல் பாதுக்காப்பது தங்களுடைய பொறுப்பாகும். இதன் அடிப்படையில் வேட்டமங்கலம்-(1). வெள்ளியம்பாளையம்-(2). புங்கோடை குளத்துபாளையம்-(3). ஒரம்புப்பாளையம்-(5). மரவாபாளையம்-(6). புங்கோடைகாளிபாளையம்-(4). முத்தனூர்-(7). கவுண்டன்புதூர் & II-(8), கரைப்பாளையம்-(9) மற்றும் நல்லிக்கோவில்(10) ஆகிய பகுதிகளில் 4612 ஏக்கர் நிலங்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து பாசனம் செய்து கொள்ளலாம் என்ற மேலே கண்டுள்ள அரசு ஆணைகளின்படி மின் மோட்டார்கள் மூலம் இறவை பாசனம் செய்து வருகிறோம்.

இந்த நீர்ரேற்று பாசனங்களால் சுற்று வட்டாரங்களில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அதனால் சுமார் 5000 க்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பயன் பெறுகிறார்கள்.இது இல்லாமல் ஓலப்பாளையம் நீர்ரேற்று பாசன சங்கம்-(1), புன்னம் நீர்ரேற்று பாசன சங்கம்-(2). சேமங்கி நீர்ரேற்று பாசன சங்கம்-(3). காளிபாளையம் நீர்ரேற்று பாசன சங்கம்-(4) மற்றும் குளத்துபாளையம் நீர்ரேற்று பாசன சங்கம்-(5) ஆகியோர் சேர்ந்து சுமார் 3000 ஏக்கருகளுக்கு மேல் விவசாயம் செய்து, விவசாயத்தை அடிப்படை ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியில் சுமார் 10000 குடும்பங்களுக்கு மேல் விவசாயத்தை அடிப்படை ஆதாரமாக கொண்டு கடின உழைப்புடன் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். வேட்டமங்கலம் மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் மட்டும் தான். புதிதாக ரயில்வே பாதை அமைக்க ஏற்கனவே அமைந்துள்ள பாதைக்கு இருபுறமும் தேவைக்கு அதிகமான நிலங்கள் இருக்கும் போது, புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

தேவைப்படின் இருபுறமும் அகலப்படுத்தி கொள்ளலாம். இதை விடுத்து விவசாய மக்கள் குடியிருக்க கூடிய ஊர்களின் நடுப்பகுதியில், விவசாய நிலத்தின் நடுப்பகுதியை ஆர்ஜிதம் செய்வதும் இயற்கை நிதிக்கு புறம்பானதாகும். விவசாய நிலங்களில் நூற்றுக்கணக்கான பாசன பைப்பு லைன் இணைப்புகள் (Line) புதைக்கப்பட்டு அதன் மூலம் பாசனம் செய்து வருகிறார்கள். மேலும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பைப்பு இணைப்புகள் (Line) நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளது.எனவே ரயில்வே நிர்வாகம் விரிவுபடுத்த நினைக்கும் திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாதவாறு

மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.