Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை வேண்டும்

அரவக்குறிச்சி, ஜூலை 27: அரவக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் வாரம் இரண்டு முறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வருவதால் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து 500 கிலோ மீட்டர் வரை வாகனங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே செயல்படுவதால் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்காக வந்து செல்கின்றது.

மேலும் ஆர்டிஓ அலுவலகம் உள்ள சாலையில் ஒரு மாதத்திற்கு முன்பு சாலை விரிவாக்கம் பணி நடந்து முடிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிக வேகமாக வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு ஆய்வுக்காக கொண்டு வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து இரண்டு பக்க சாலைகளில் தலா 100 மீட்டர் தொலைவில் இரண்டு வேகத்தடைகள் அமைத்து தர வேண்டுமென ஆய்வுக்காக வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.