கரூர், செப்.26: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்திட மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டு பகுதிகளிலும் தெரு நாய்கள் கட்டுக்கடங்காமல் சுற்றித்திரிகிறது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை தெருநாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு வேலைகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் தெரு நாய்களால் கடும் அவதிப்படுகின்றனர்.
+
Advertisement


