Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குளித்தலை பகுதியில் போதிய மழை இல்லாததால் வறண்டு கிடக்கும் குளம், குட்டைகள்

குளித்தலை, செப். 25: குளித்தலை பகுதியில் போதிய மழை இல்லாததால் குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேலும் மேட்டூர் அணையில் ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் விவசாயிகள் பயிர்கள் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு போய்விட்டது. இதனால் விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு சமீபத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் குடி தண்ணீருக்கே போதிய அளவில் இல்லாத நிலையில், ஆங்காங்கே தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்காலில் விடப்படும் தண்ணீரை வைத்துக் கொண்டு விவசாயிகள் பாசனம் செய்து வந்தனர்.

மேலும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் போதிய ஈரப்பதம் இல்லாததால் உழுவதற்கு கூட முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிராமப்புறங்களில் ஆங்காங்கே குளம், குட்டைகள் வெட்டப்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியை சுற்றி உள்ள கிணற்றில் தண்ணீர் ஊற்று ஏற்பட்டு கிணற்றின் நீர்மட்டம் உயரும் என்ற காரணத்தினால் இதுபோன்று அரசு சார்பில் கிராமப்புறங்களில் குளங்கள் வெட்டப்பட்டு இருந்து வந்தது.

சமீபத்தில் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் இது போன்ற குளம், குட்டைகள் வறண்ட நிலையில் இருக்கிறது. இதனால் ஆடு, மாடுகள் தண்ணீருக்கும், விவசாயிகளுக்கு பாசனத்திற்கும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். வரும் காலத்தில் பருவமழை அதிக அளவில் பெய்தால் குளம்,

குட்டைகள் நிரப்புவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது, சரியான மழை இல்லை என்றால், விவசாயிகள் பெரிதும் ஏமாற்றத்து உள்ளவார்கள்.