கரூர், செப். 25: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்விற்கு பின் மாவட்ட கலெக்டர் கூறியதாவது,கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறிந்து அகற்றப்பட்டு வருகின்றன.மேலும், வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், பொதுமக்களுக்கு சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், தண்ணீர் தேங்காத வகையிலும் பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


