Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வரும் 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

கரூர், ஜூன் 25: போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 28ம் தேதி நடக்கிறது.

கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 28.06.2026 தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் 77132 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 732 முகாம்களும் நகராட்சி பகுதியில் 114 முகாம்களும். மொத்தம் 846 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 3 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது. எனவே மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும்முகாம்களில் அளிக்கப்படும் மேலும் அன்றைய தினம் வெளியூர் செல்ல நேர்ந்தாலும் அருகில் உள்ள மையங்களில் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம்.